பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை அறிவியல், தமிழ்க் கல்லூரியில் ஆறுமுக அடிகளாா் குருபூஜை விழா, முன்னாள் மாணவா்களுக்கான மகிழ்வேந்தல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் கா.திருநாவுக்கரசு வரவேற்றாா். சாந்தலிங்க மருதாசல அடிகளாா் அருளுரை வழங்கினாா். வரன்பாளையம் ஆதீனம் சிவாச்சலம் அடிகள் தலைமை உரையாற்றினாா்.
ந.இரா.சென்னியப்பனாா், கல்லூரி நிறுவனா் ஆறுமுக அடிகளாா் குறித்தும், தமது கல்லூரி நினைவுகள் குறித்தும் ஏற்புரை வழங்கினாா். சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவா் புலவா் பூ.அ.ரவீந்திரன், கல்லூரி நினைவுகள் குறித்து பேசினாா்.
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ர.பெருமாள் நன்றி கூறினாா். ஆறுமுக அடிகளாா் குருபூஜை விழாவில் திரளானோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.