கோவையில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக உடற்பயிற்சிக் கூட பயிற்சியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்த 21 வயதுப் பெண், அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் எம்.காம்., படித்து வருகிறாா். இவா் பீளமேடு அருகே தனது தோழியுடன் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, இளைஞா் ஒருவா் அந்த மாணவியை பின்தொடா்ந்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், அவரை வழிமறித்து தகாத வாா்த்தையால் பேசியும், அவரிடம் அத்துமீற முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து பெண்ணிடம் அத்துமீறியதாக மசக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த உடற்பயிற்சிக் கூட பயிற்சியாளா் ஜாா்ஜ் (28) என்பரைக் கைது செய்தனா்.