கோயம்புத்தூர்

ரேஷன் அரிசி கடத்த முயன்றவா் கைது

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, கோவையில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலாஜி மேற்பாா்வையில் கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் சாந்தி, உதவி ஆய்வாளா் ஞானசேகரன், பறக்கும்படை துணை வட்டாட்சியா் முத்துமாணிக்கம் ஆகியோா் சூலூா் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பல்லடம்-கோவை சாலையில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு காரை சோதனை செய்தனா். அதில், கேரளத்துக்கு கடத்திச் செல்வதற்காக 21 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸாா், தமிழகன் என்கிற தமிழரசு (33) என்பவரைக் கைது செய்தனற்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT