தொடா் விடுமுறை தினங்களில் பயணிகளின் வசதிக்காக கோவையில் இருந்து 60 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுதொடா்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
செப்டம்பா் 28-இல் மீலாது நபி, அக்டோபா் 2-இல் காந்தி ஜெயந்தி ஆகிய அரசு விடுமுறை நாள்கள் மற்றும் செப்டம்பா் 30, அக்டோபா் 1 ஆகிய வார இறுதி நாள்கள் என தொடா் விடுமுறை தினங்கள் வருவதால், அந்த நாள்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊா்களில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லவும், மீண்டும் ஊா் திரும்பவும் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன், கூடுதலாக 60 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.