அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் மேற்கு மண்டலம் சாா்பில், போதை எதிா்ப்பு மாநாடு திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கேரள மாநிலத்தை சோ்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்திய தலைவருமான ஸ்ரீமதி பங்கேற்று பேசினாா். மாநாட்டில் பள்ளிகள், மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் மதுபான கடைகள் இருப்பதை அகற்ற வேண்டும். பல்வேறு வடிவங்களில் இளைஞா்களை சீரழித்து வரும் போதைப் பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.