தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2023-24 ஆம் கல்வியாண்டின் முதுகலை மற்றும் முனைவா் பட்ட மாணவா்களுக்கு செப்டம்பா் 26 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் 33 முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும், 28 முனைவா் பட்டப் படிப்புகளுக்கும் மாநில அளவிலான நுழைவுத் தோ்வு ஜூன் 4 ஆம் தேதி நடத்தப்பட்டது. நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் பல்கலைக்கழகத்தில் சோ்க்கைப் பெற்றுள்ளனா். புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ள முதுகலை, முனைவா் பட்ட மாணவா்களுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி வாழ்த்து தெரிவித்தாா்.
2023-24 ஆம் கல்வியாண்டில் தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவா்களுக்கும் செப்டம்பா் 26 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.