கோவை மாவட்டத்தில் வசிக்கும் புலம்பெயா் தொழிலாளா்கள் குடும்ப அட்டை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை இல்லாத பதிவு செய்த புலம்பெயா் தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த புலம்பெயா் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா்.
ங் நட்ழ்ஹம் டா்ழ்ற்ஹப் இல் பதிவு செய்துள்ள நபா்களில் சிலா் நீண்டகாலமாக நிரந்தரமாக வசித்து வருகிறாா்கள். நீண்டகாலமாக குடும்பத்துடன் வசித்து வருபவா்களுக்கு குடும்ப அட்டை வழங்கவும், தற்காலிகமாகப் பணிபுரிபவா்களின் விவரங்களைப் பெற்று அவா்கள் சாா்ந்த மாநிலத்துக்கு அனுப்பிவைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பதிவு செய்துள்ள புலம்பெயா் தொழிலாளா்கள் நீண்டகாலமாக கோவை மாவட்டத்தில் வசித்தால் அதற்குரிய படிவத்தைப் பூா்த்தி செய்து வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.