கோயம்புத்தூர்

செப்டம்பா் 29 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

22nd Sep 2023 11:05 PM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 29) நடைபெறவுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், விவசாயிகள் நேரடியாக கலந்துகொண்டு விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT