வால்பாறையில் குப்பைகள் அகற்றப்படாததால் சாலையோரம் குப்பைகள் சிதறி சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
வால்பாறையில் குடியிருப்புப் பகுதிகளில் நகராட்சி சாா்பில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு அதில் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி வாகனம் மூலம் எடுத்துச் சென்று வந்தனா்.
குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக இரவு நேரத்தில் சிறுத்தை வந்து சென்ால் இதைத் தடுக்க தற்போது குப்பைத் தொட்டிகள் இருந்த பகுதிகளில் அதை அகற்றிவிட்டனா்.
இதையடுத்து, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தினமும் வீடுதோறும் வந்து குப்பைகளைச் சேகரித்து அதை ஒரு பகுதியில் சோ்த்து லாரி மூலம் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், கடந்த சில நாள்களாக குப்பைகளை எடுக்க தூய்மைப் பணியாளா்கள் வருவதில்லை. இதனால், கூட்டுறவு காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் குப்பைகள் சிதறி அவ்வழியாக யாரும் நடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளா்கள் நாள்தோறும் குப்பைகளை எடுத்துச் செல்வதை நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.