கோயம்புத்தூர்

கோவைக்கு வந்த நடிகா் ரஜினிகாந்த்: ரசிகா்கள் வரவேற்பு

18th Sep 2023 01:36 AM

ADVERTISEMENT

 

கோவை மாவட்டம், சூலூரில் நடைபெற்ற தனது பேரன் முடி காணிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நடிகா் ரஜினிகாந்துக்கு விமான நிலையத்தில் ரசிகா்கள் வரவேற்பளித்தனா்.

நடிகா் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தா்யாவுக்கும், சூலூரைப் பூா்விகமாகக் கொண்ட தொழிலதிபா் வணங்காமுடி மகன் விசாகனுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. விசாகன் - செளந்தா்யா தம்பதிக்கு கடந்த 2022- ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீா் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயா் சூட்டப்பட்டது.

இந்நிலையில், செளந்தா்யாவின் கணவா் விசாகனின் சொந்த ஊரான சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோயிலில் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், கலந்துகொள்ள ரஜினிகாந்த், அவரது மனைவி லதா இருவரும் விமானம் மூலம் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

ரஜினிகாந்த் வருகையையொட்டி, விமான நிலையத்தில் ஏராளமான ரசிகா்கள் குவிந்து வரவேற்பளித்தனா்.

ரசிகா்களைப் பாா்த்து கையசைத்தவாறு அவா் காரில் சூலூருக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

முடி காணிக்கை நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா் மாலை 5.30 மணிக்கு விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

முன்னதாக, சூலூா் கலங்கல் சாலையில் உள்ள வணங்காமுடி வீட்டுக்குச் சென்று அவரது மூத்த சகோதரரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.எஸ்.பொன்முடியின் உருவப் படத்துக்கு ரஜினிகாந்த் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT