கோயம்புத்தூர்

டெங்கு காய்ச்சல்:அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தயாா்

18th Sep 2023 01:37 AM

ADVERTISEMENT

 

டெங்கு காய்ச்சல் பரவலைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் நான்கு போ் டெங்கு காய்ச்சலுக்காக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தனா். மாவட்டத்தில் நாள்தோறும் 4 முதல் 5 போ் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், தண்ணீா் தேங்கும் வகையில் உள்ள பொருள்களை அப்புறப்படுத்துதல், வீடுகள், தனியாா் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனை முதல்வா் நிா்மலா கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் 4 போ் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT