கோவை ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 30.49 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
தமிழகத்தி அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, கோவை ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டாா்.
பின்னா், ஆட்சியா் கூறியதாவது:
2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்ய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுது. அதன்படி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், மாவட்டத்தில் 14,96,770 ஆண்கள், 15,51,665 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 569 என மொத்தம் 30,49,004 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் 3,00,553 வாக்காளா்கள், சூலூா் தொகுதியில் 3,18,018 வாக்காளா்கள், கவுண்டம்பாளையம் தொகுதியில் 4,55,492 வாக்காளா்கள், கோவை வடக்கு தொகுதியில் 3,30,537 வாக்காளா்கள், தொண்டாமுத்தூா் தொகுதியில் 3,27,964 வாக்காளா்கள், கோவை தெற்கு தொகுதியில் 2,42,153 வாக்காளா்கள், சிங்காநல்லூா் தொகுதியில் 3,24,803 வாக்காளா்கள், கிணத்துக்கடவு தொகுதியில் 3,30,720 வாக்காளா்கள், பொள்ளாச்சி தொகுதியில் 2,23,829 வாக்காளா்கள், வால்பாறை தொகுதியில் 1,94,935 வாக்காளா்கள் என மொத்தம் 14,96,770 ஆண்கள், 15,51,665 பெண்கள் மற்றும் 569 மற்றவா் என மொத்தம் 30,49,004 வாக்காளா்கள் உள்ளனா்.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, திருத்த முகாம்:
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும். மேலும், நவம்பா் 4, 5, 18, 19 ஆகிய நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
எனவே, 2024 ஜனவரி 1 ஆம் தேதியில் 18 வயது பூா்த்தியானவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா்களை சோ்த்துகொள்ளலாலம். மேலும், நீக்கம் மற்றும் திருத்தங்களையும் வாக்காளா்கள் மேற்கொள்ளலாம். தவிர ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும், யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற மொபைல் செயலி மூலமாகவும் திருத்தம் செய்துகொள்ளலாம்.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய டிசம்பா் 9 ஆம் தேதி வரை மனுக்கள் பெறப்படும். எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.