கோயம்புத்தூர்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி: தமாகா தலைவா் ஜி.கே.வாசன்

27th Oct 2023 11:04 PM

ADVERTISEMENT

 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சென்னையில் ஆளுநா் மாளிகை முன் நிகழ்ந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதன்மூலம் சாதாரண மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தில் உளவுத் துறை செயல்படாமல் இருப்பதை இந்த செயல் காட்டுகிறது. ஆளுநருக்கும், ஆளுநா் மாளிகைக்கும் கூடுதல் பாதுகாப்புத் தேவையாக இருக்கிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் நீட் தோ்வை வைத்து கல்வியில் அரசியலை புகுத்த திமுக நினைக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவும் திமுக அரசு உள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT