கோயம்புத்தூர்

டெங்கு கொசு ஒழிப்புப் பணி: ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆய்வு

27th Oct 2023 11:01 PM

ADVERTISEMENT

கோவை, உக்கடம் சி.எம்.சி. காலனியில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கோவை மாநகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உக்கடம் சி.எம்.சி. காலனியில் நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்புப் பணியை ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது, வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றவும், கொசுப் புகை மருந்து அடிக்கவும், தேவையில்லாத பொருள்களை அகற்றவும், பொதுமக்கள் பிடித்து வைத்துள்ள தண்ணீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை கண்டறியவும் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினா்.

மேலும், டெங்கு கொசு கட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி,

ADVERTISEMENT

டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தினா்.

ஆய்வின்போது சுகாதாரத் துறை துணை இயக்குநா் பு.அருணா, உதவி நகா்நல அலுவலா் வசந்த் திவாகா், மண்டல சுகாதார அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT