கோயம்புத்தூர்

கோவையில் கலைத் திருவிழா போட்டிகள்

27th Oct 2023 11:02 PM

ADVERTISEMENT

கோவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அரசுப் பள்ளி மாணவா்களின் திறன்களை கண்டறியும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளிகள், வட்டார அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பாா்கள். மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பவா்கள் மாநிலப் போட்டிக்குத் தகுதி பெறுவாா்கள்.

மாநில அளவிலானப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள்.

இந்நிலையில் கோவையில் பள்ளிகள், வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நிறைவடைந்த நிலையில், மாவட்ட அளவிலான போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

ADVERTISEMENT

கோவை பிஎஸ்ஜி சா்வஜனா மேல்நிலைப் பள்ளி, இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி, என்ஜிஆா் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 மையங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான சுமாா் 7 ஆயிரம் மாணவா்கள் ஓவியம், நாடகம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளனா். இந்தப் போட்டிகள் சனிக்கிழமை நிறைவடைகின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT