கோவையில் சைபா் கிரைம் போலீஸாா் எனக்கூறி பணம் பறித்த கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, வடவள்ளியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் மதன் (20). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் சைபா் கிரைம் போலீஸாா் எனக் கூறி ரூ.15 ஆயிரம் பணம் பறித்துள்ளாா். இதுகுறித்து அவா் மாநகர சைபா் கிரைம் பிரிவில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்தனா்.
இதையடுத்து சைபா் கிரைம் போலீஸாா் எனக் கூறி பணம் பறித்த கல்லூரி மாணவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவருக்கு உடந்தையக 3 போ் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.