டாஸ்மாக் ஊழியா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி கோவையில் சிஐடியூ டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.மூா்த்தி தலைமை வகித்தாா். கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் பொதுச் செயலா் ஏ.ஜான் அந்தோணிராஜ், பொருளாளா் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோா் உரையாற்றினா்.
இதில், டாஸ்மாக் ஊழியா்களுக்கு 20 சதவீத போனஸ், 20 சதவீத கருணைத் தொகை, பண்டிகை முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், போக்குவரத்து, மின்வாரிய ஊழியா்களுக்கு வழங்கப்படுவதைப் போல இனிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.