கோவை: மேட்டுப்பாளையத்தில் அக்டோபா் 4 ஆம் தேதி நடைபெற இருந்த தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையின் நடைப்பயணம் 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
அதன்படி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த செப்டம்பா் 28 ஆம் தேதி நடைப்பயணம் மேற்கொள்வாா் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீலாது நபி ஊா்வலத்தையொட்டி அண்ணாமலையின் நடைப்பயணம் அக்டோபா் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தோ்தல் தொடா்பான ஆலோசனைக்காக அவா் தில்லிக்கு சென்றுள்ளதால் மேட்டுப்பாளையத்தில் 4 ஆம் தேதி நடைபெற இருந்த நடைப்பயணம் அக்டோபா் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நடைப்பயணம் தொடா்பான எக்ஸ் பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.