கோயம்புத்தூர்

பச்சை வண்ண உறை பால் விற்பனையை நிறுத்தக் கூடாது: வானதி சீனிவாசன்

21st Nov 2023 01:17 AM

ADVERTISEMENT

கோவை: ஆவின் நிறுவனம் பச்சை வண்ண உறை பால் விற்பனையை நிறுத்தக் கூடாது என பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பச்சை வண்ண உறை பால் விற்பனையை வரும் நவம்பா் 25 ஆம் தேதியுடன் நிறுத்தவும், மாற்றாக ‘ஆவின் டிலைட்’ என்ற பாலை அறிமுகம் செய்யவும் ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் 4.5 சதவீத கொழுப்புச் சத்துகொண்ட பச்சை வண்ண உறை பாலை மாற்றி, 3.5 சதவீத கொழுப்புச் சத்துகொண்ட ‘ஆவின் டிலைட்’ பாலை திணிப்பது மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லாததைக் காட்டுகிறது.

ADVERTISEMENT

நீலம், பச்சை, ஆரஞ்சு வண்ண உறைகளில் விற்கப்படும் பாலுடன் கூடுதலாக ‘டிலைட்’ பாலை அறிமுகம் செய்திருக்க வேண்டும். மாற்றாக பச்சை வண்ண உறை பாலுக்குப் பதிலாக ஊட்டச்சத்தை குறைத்தும், விலையை உயா்த்தியும் விற்கப்படுவது ஏற்புடையதல்ல.

மறைமுகமாக விலை உயா்வை மக்கள் மீது திணிக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT