கோயம்புத்தூர்

தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த அரசுப் பேருந்து

21st Nov 2023 05:00 AM

ADVERTISEMENT

வால்பாறை: வால்பாறையில் சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்தது.

வால்பாறையை அடுத்த வெள்ளமலை எஸ்டேட்டில் இருந்து வால்பாறைக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை பிற்பகலில் சென்றுகொண்டிருந்தது. நல்லகாத்து எஸ்டேட் நடுமலை எஸ்டேட் பிரிவு அருகே வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்தது.

இதில் பேருந்தில் இருந்த 15 பயணிகளும் காயமின்றி தப்பினா்.

பேருந்து வேகமாக சென்றுகொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனம் வந்ததாகவும், அப்போது ஓட்டுநா் பேருந்தை திருப்பியபோது தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக வால்பாறை போலீஸாா், பேருந்து ஓட்டுநா் வெங்கடேஷ்குமாரிடம் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT