கோவை: கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பா் 21) இரவு ஏ.சி. சிறப்பு ரயில் புறப்படுகிறது.
கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் இந்த ரயில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு 24 ஆம் தேதி அதிகாலை 3.10 மணிக்கு ஜோத்பூரை சென்றடைகிறது.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, நாக்பூா், போபால், கோடா, ஜெய்ப்பூா் வழியாக செல்கிறது. இந்த சிறப்பு ரயில், 11 இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளையும், 4 மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளையும் கொண்டிருக்கும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.