கோயம்புத்தூர்

அமைச்சா் செந்தில்பாலாஜி ஆதரவாளா்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை நிறைவு

31st May 2023 03:14 AM

ADVERTISEMENT

கோவையில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரிச் சோதனை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருமான வரித் துறையினா் தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டனா்.

கோவையில் கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள திமுக பிரமுகரும், செந்தில்பாலாஜியின் ஆதரவாளருமான செந்தில்காா்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகம், ரேஸ்கோா்ஸ் பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவரது வீடு, செளரிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகம், அரவிந்த் மனைவி காயத்ரிக்கு சொந்தமான தொண்டாமுத்தூரில் உள்ள போதை மறுவாழ்வு மையம், பொள்ளாச்சியை அடுத்த பனப்பட்டியில் உள்ள சங்கா் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான கல் குவாரி மற்றும் அங்குள்ளஅலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தொடா்ந்து 5 ஆவது நாளாக, செவ்வாய்க்கிழமை காலை வரை வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

இந்த தொடா் சோதனை செவ்வாய்க்கிழமை காலை 8.35 மணிக்கு நிறைவுற்றது. சோதனை குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT