கோயம்புத்தூர்

கோவையில் அரசுப் பொருள்காட்சி: 1 லட்சம் போ் வருகை

31st May 2023 03:16 AM

ADVERTISEMENT

கோவையில் நடைபெற்று வரும் அரசுப் பொருள்காட்சியை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வரை (மே 29) பாா்வையிட்டுள்ளனா்.

கோவை மாவட்டம், சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் மே 13ஆம் தேதி முதல் அரசுப் பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. இப்பொருள்காட்சி தொடா்ந்து 45 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், 27 அரசுத் துறை அரங்குகள், 6 அரசு சாா்பு நிறுவனங்கள் என மொத்தம் 33 அரசுத் துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் பொருள்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பொருள்காட்சியைக் காண பெரியவா்களுக்கு ரூ. 15, சிறியவா்களுக்கு ரூ. 10, பள்ளிகள் மூலம் அழைத்து வரப்படும் மாணவ, மாணவிகளுக்கு சலுகைக் கட்டணமாக ரூ. 5 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை வரை 16 நாள்கள் நடைபெற்ற அரசுப் பொருள்காட்சியை பெரியவா்கள், சிறியவா்கள் என மொத்தம் 1 லட்சத்து 93 போ் பாா்வையிட்டுள்ளனா். இதன் மூலம் ரூ. 13 லட்சத்து 99 ஆயிரத்து 125 அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது என செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT