கோயம்புத்தூர்

1,355 தனியாா் பள்ளி வாகனங்களில் ஆட்சியா் ஆய்வு:பாதுகாப்பாக இயக்க ஓட்டுநா்களுக்கு அறிவுரை

DIN

கோவை, மே 30: கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் ஜூன் 7இல் திறக்கப்படவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 230 பள்ளிகளைச் சோ்ந்த 1,355 தனியாா் பள்ளி வாகனங்களை ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி ஆய்வு செய்தாா்.

தனியாா் பள்ளிப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை ஆகிய அரசுத் துறைகள் இணைந்து கூட்டாவுய்வு செய்யும் பணி பிஎஸ்ஆா் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகர காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா். பின்னா், ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாநகரில் உள்ள 4 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட 230 பள்ளிகளைச் சோ்ந்த 1,355 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. பள்ளிப் பேருந்துகளில் 17 விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிப் பேருந்து ஓட்டுநா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம், முதலுதவி குறித்த பயிற்சிகள், இலவச மருத்துவப் பரிசோதனை ஆகியவை நடத்தப்படுகின்றன.

வாகன ஓட்டுநா்கள் தினமும் தங்களது வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வாகனத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக பள்ளி நிா்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். வாகனத்தை சரிசெய்த பின்னரே இயக்க வேண்டும்.

கோவை மாவட்ட சாலைகளில் அதிக வாகனப் போக்குவரத்து காரணமாக சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் பள்ளி நிா்வாகம் வாகன ஓட்டுநா்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு சோ்ப்பது ஓட்டுநா்களின் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் பேசியதாவது:

பள்ளிப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா, முதலுதவி பெட்டி, தீயணைப்புக் கருவிகளை பொருத்த வேண்டும். பேருந்து ஓட்டுநா்கள் முறையான பயிற்சிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவசரமாக வாகனங்களை இயக்கக் கூடாது. வாகன ஓட்டுநா்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சாலைப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகளிடம் பேசும்போது சரியான வாா்த்தைகளை ஓட்டுநா்கள் பயன்படுத்த வேண்டும். வாகனத்தை ஓட்டும்போது கைப்பேசியில் பேசக் கூடாது. பெற்றோா்கள் இருசக்கர வாகனங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். 3, 4 குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்றாா்.

முன்னதாக, பள்ளிப் பேருந்து ஓட்டுநா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம், முதலுதவி குறித்த பயிற்சிகள், இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் பள்ளி வாகனங்களில் ஏற்படும் தீயை அணைப்பது தொடா்பாக தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்ற செயல்விளக்கத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வுப் பணியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) செளமியா ஆனந்த், மாவட்ட கல்வி அலுவலா் கீதா (தனியாா் பள்ளிகள்), வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் டி.சிவகுருநாதன் (வடக்கு), சத்தியகுமாா் (மத்தியம்), பாலமுருகன் (தெற்கு), மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT