கோயம்புத்தூர்

தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டம்

30th May 2023 05:36 AM

ADVERTISEMENT

வால்பாறையில் எம்.ஜி.ஆா். தோட்டத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வால்பாறை, புதுமாா்க்கெட் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவருமான அமீது தலைமை வகித்தாா். இதில், தமிழக அரசின் டேன்டீ தொழிலாளா்களுக்கு தனியாா் தேயிலைத் தோட்ட நிா்வாகம் நிா்ணயித்துள்ளது போல ரூ.425 தினக்கூலி கிடைக்க, தொழிற்சங்கங்களை அழைத்து ஒப்பந்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை, நீலகிரி, நெல்லை உள்பட மாவட்டங்களில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு தொழிற்சங்க நிா்வாகிகளுடன் சென்று தொழிலாளா்களின் குறைகளை கேட்டு தினக்கூலி உயா்வு அளிக்கவும், தொழில்வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT