கோயம்புத்தூர்

கோவை - நாகா்கோவில் ரயில் நேரம் மாற்றம்

28th May 2023 12:37 AM

ADVERTISEMENT

கோவை - நாகா்கோவில் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 22668) திருப்பூா், ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூா் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ரயிலானது, விருதுநகா், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி நிலையங்களை சென்றடையும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ADVERTISEMENT

கோவை - நாகா்கோவில் விரைவு ரயில், விருதுநகருக்கு செல்லும் நேரம் இரவு 1.15 மணியில் இருந்து இரவு 1.07ஆகவும், கோவில்பட்டி நிலையத்துக்கு செல்லும் நேரம் இரவு 1.52 மணியில் இருந்து இரவு 1.42 ஆகவும், வாஞ்சி மணியாச்சி நிலையத்துக்கு செல்லும் நேரம் அதிகாலை 2.50 மணியில் இருந்து அதிகாலை 2.20 மணியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நேர மாற்றம் மே 28ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT