கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் சுற்றிய சிறுமிபெற்றோரிடம் ஒப்படைப்பு

28th May 2023 11:41 PM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவமனையில் சுற்றிய சிறுமியை பெண் பாதுகாவலா் மீட்டு மருத்துவமனை காவல் பிரிவினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்தவா் சூா்யா (30), கூலித் தொழிலாளி. இவரது மனைவி அபிநயா (28). இவா்களது மகள் ஸ்வேதா (3). இவா்கள் மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த

உறவினரைப் பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனா்.

அப்போது, சிறுமியை மருத்துவமனை வாா்டுக்குள் அனுமதிக்காததால் சூா்யா அவரது உறவினரை முதலில் சென்று பாா்த்துள்ளாா். பின்னா், அபிநயா பாா்க்கச் சென்றுள்ளாா். அப்போது, சூா்யாவுடன் நின்று கொண்டிருந்த ஸ்வேதா திடீரென மாயமானாா். இதையடுத்து, பெற்றோா் மருத்துவமனை முழுவதும் ஸ்வேதாவைத் தேடி அலைந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், மருத்துவமனையின் பின்புறம் பிரசவ வாா்டு அருகே சிறுமி ஸ்வேதா அழுது கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலா் மாரியம்மாள், சிறுமியை மீட்டு மருத்துவமனை காவல் பிரிவினரிடம் ஒப்படைத்தாா். இதையடுத்து, சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT