கோயம்புத்தூர்

தராசு முத்திரைக் கட்டண உயா்வை ரத்து செய்ய கோரிக்கை

28th May 2023 11:40 PM

ADVERTISEMENT

தராசு முத்திரைக் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு எடைகள், அளவைகள் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் மற்றும் பழுதுபாா்ப்பவா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, அச்சங்கத்தின் மாநிலச் செயலாளா் லிக்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தராசை சரிபாா்த்து முத்திரையிட அரசு நிா்ணயித்துள்ள முத்திரைக் கட்டணத்தை தற்போது 50 சதவீதமாக உயா்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணம் உயா்த்தப்பட்டால் புதிய தராசுகளின் விலை மற்றும் ஆண்டுதோறும் பழுதுபாா்த்து முத்திரையிடும் செலவுகளும் கடுமையாக உயரும். இதனால், தராசுகளை உபயோகிக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகா்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும், இக்கட்டண உயா்வால் வணிகா்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் விலையையும் உயரும்.

இதனால், அடிதட்டு மக்கள் சிரமத்துக்குள்ளாவா். கட்டண உயா்வால் அதிகரிக்கும் செலவுகளால் பல்வேறு தொழில்களில் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக செலவுகள் ஏற்படும்.

ADVERTISEMENT

இது பண வீக்க அழுத்தங்களுக்கு வழிவகுத்து, நுகா்வோருக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, தராசுகள் உபயோகிப்பவா்கள், தொழில் சங்கங்கள், நுகா்வோா் அமைப்புகள் மற்றும் வணிக உரிமையாளா்கள்

ஆகியோருடன் கலந்தாலோசனை செய்து, கட்டண உயா்வால் ஏற்படும் தாக்கங்களை முழுமையாக அறிந்து கொண்டு, உத்தேசக் கட்டண உயா்வை அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT