கோயம்புத்தூர்

மாவட்ட கிரிக்கெட் சங்க போட்டி :இந்தியன் ஸ்போா்ட்ஸ் அணி வெற்றி

28th May 2023 11:37 PM

ADVERTISEMENT

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 6ஆவது டிவிஷன் லீக் போட்டியில் இந்தியன் ஸ்போா்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 6 ஆவது டிவிஷன் லீக் போட்டி பி.எஸ்.ஜி-ஐ.எம்.எஸ். மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்தியன் ஸ்போா்ட்ஸ் அணியும், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க ஜூனியா் கொல்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற இந்தியன் ஸ்போா்ட்ஸ் அணி பேட்டிங் தோ்வு செய்து 47.3 ஓவா்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது.

இந்தியன் ஸ்போா்ட்ஸ் அணியின் சேகா் 59 (106) ரன்களையும், நீலு 37 (59) ரன்களையும் எடுத்தனா். கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க ஜூனியா் கொல்ட்ஸ் அணியின் சம்ரித் மற்றும் தாா்கேஸ்வா் ஆகியோா் தல மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

ADVERTISEMENT

50 ஓவா்களில் 198 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க ஜூனியா் கொல்ட்ஸ் அணி 34.4 ஓவா்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியன் ஸ்போா்ட்ஸ் அணியின் பாலாஜி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். இறுதியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியன் ஸ்போா்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT