கோயம்புத்தூர்

கோவையில் பரவலாக மழை:வெள்ளக்காடாக மாறிய தடாகம் சாலை

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவையில் வியாழக்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது.

தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்தது.

தடாகம் சாலை, இடையா்பாளையம், டிவிஎஸ் நகா், வடவள்ளி, உலியம்பாளையம், தொண்டாமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல சரவணம்பட்டி, பீளமேடு, கணபதி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

கோவை மாவட்டத்தில் பில்லூா் 3ஆம் குடிநீா்த் திட்டத்துக்கு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இடையா்பாளையம், வேலாண்டிபாளையம், கோவில்மேடு, வெங்கிட்டாபுரம் உள்ளிட்ட சாலைகள் தோண்டப்பட்டு குண்டும்குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், அப்பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில் சேறும்சகதியுமாக இருந்ததால், குழிகளில் வாகனங்கள் சிக்கின. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT