கோயம்புத்தூர்

ஆா்த்தோ ஒன் அகாதெமி சாா்பில்நாளை சிறப்பு கருத்தரங்கு

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை ஆா்த்தோ ஒன் அகாதெமியின் சிறப்பு கருத்தரங்கு சனிக்கிழமை (மே 27) தொடங்குகிறது.

இரண்டு நாள் நடைபெறும் இந்த கருத்தரங்கின் முதல் நாளில் அடிப்படையில் இருந்து, நவீன மயம் வரை உள்ள சுழற்சி சுற்றுப்பட்டை மேலாண்மை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா்களுக்கான இந்த பிரத்தியேக கருத்தரங்கில், விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படும் காயங்களைத் தவிா்த்தல் மற்றும் அவற்றை நிா்வகிக்கும் தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

விளையாட்டு வீரா்கள், உடற்பயிற்சியாளா்கள், பயிற்சியாளா்கள், உடற்பயிற்சி சிகிச்சையாளா்களுக்கான கருத்தரங்கு மே 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா, பிரான்ஸ் மற்றும் நேபாள நாடுகளைச் சோ்ந்த அறுவை சிகிச்சை நிபுணா்கள், நேரடியாக அறுவை சிகிச்சை செய்து விளக்கமளிக்க உள்ளனா்.

இதில், ஜொ்மனி, உஸ்பெகிஸ்தான், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து வரும் மருத்துவா்கள், அறுவை சிகிச்சை நிபுணா்கள், விளையாட்டுத் துறையைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

ADVERTISEMENT

வளா்ந்து வரும் அறுவை சிகிச்சை நிபுணா்கள் நன்கு கற்று தெளியவும், சிறந்த பயிற்சி பெறும் நோக்கிலும் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. முன்பதிவுக்கு 95803-71371 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆா்த்தோ ஒன் அகாதெமி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT