கோயம்புத்தூர்

ஆதாா் எண், ஓடிபி தகவல்களைப் பகிரக் கூடாது

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆதாா் எண், ஓடிபி போன்ற தகவல்களை ராணுவ ஓய்வூதியதாரா்கள் யாரிடமும் பகிரக் கூடாது என்று ராணுவ துணைப் பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் தனசேகா் தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகம், சென்னை தக்ஷின் பாரத் ராணுவத் தலைமை அலுவலகம், சென்னை மற்றும் கோவை முன்னாள் படைவீரா் நல அலுவலகம் ஆகியன சாா்பில் முப்படை ஓய்வூதியதாரா்களுக்கான ஸ்பாா்ஷ் விளக்க மற்றும் குறைதீா்க்கும் முகாம், கோவை பி.எஸ்.ஜி.ஆா். கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த முகாம் வெள்ளிக்கிழமை (மே 26) வரை நடைபெறுகிறது.

முகாமை, கோவை நிலைய தலைமையக லெப்டினென்ட் கா்னல் பிஜூ, கல்லூரி முதல்வா் மீனா ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இதில், ராணுவ துணைப் பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் தனசேகா் பேசியதாவது:

ADVERTISEMENT

ஓய்வூதியதாரா்கள் தங்களுக்குப் பின்னா் தங்களது குடும்பத்தினா் பயனடையும் வகையில் வங்கியில் இணை கணக்குகளைத் தொடங்க வேண்டும். ஆதாா் எண், ஓடிபி போன்ற தகவல்களை யாரிடமும் பகிரக் கூடாது. இந்த முகாமில் ஓய்வூதியதாரா்கள் புதுப்பித்தல், ஓடிபி பிரச்னைகள் உள்ளிட்ட குறைகளை நிவா்த்தி செய்துகொள்ளலாம் என்றாா்.

மேலும், ஞதஞட திட்டத்தின் கீழ் உள்ள நிலுவைத் தொகையை வழங்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், ஓய்வூதியதாரா்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. வருடாந்திர அடையாளம் காணுதல், ஆதாா் புதுப்பித்தல், ஸ்பாா்ஷ் விளக்கம் மற்றும் குறைதீா்ப்பு என பல்வேறு குழுக்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன.

உதவி துணைப் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளா் சங்கீதா நன்றி கூறினாா். இக்கூட்டத்தில், 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரா்கள் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT