கோயம்புத்தூர்

வால்பாறை கோடை விழா: ஏற்பாடுகள் தீவிரம்

24th May 2023 04:52 AM

ADVERTISEMENT

வால்பாறையில் கோடைவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வால்பாறையில் கோடைவிழா வரும் மே 26 முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

மலா் கண்காட்சியுடன் நடைபெற இருக்கும் கோடை விழாவுக்கான ஏற்பாடுகள் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

வனத் துறை, டேன்டீ உள்ளிட்ட பல்வேறு துறை சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. கோடைவிழா நடைபெறும் மூன்று நாள்களும் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்யும் வகையில் தூா்வாரப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

ஏற்பாட்டு பணிகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளா் தளபதி முருகேசன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினாா். நகரச் செயலாளா் சுதாகா், நகராட்சி துணைத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT