கோயம்புத்தூர்

ரேஷன் அரிசி கடத்தல்:2 போ் கைது

24th May 2023 04:48 AM

ADVERTISEMENT

கோவை அருகே ரேஷன் அரிசியை கடத்த முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மண்டல காவல் கண்காணிப்பாளா் பாலாஜி மேற்பாா்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாா், கோவை-பாலக்காடு சாலையில் வாளையாறு அருகே செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 6 மூட்டைகளில் மொத்தம் 450 கிலோ ரேஷன் அரிசி

இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் காரில் வந்தவா், கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த ஜிகாப் (35), அவருக்கு உதவியாக இருசக்கர வாகனத்தில் வேவு பாா்க்க வந்த கோவை, கே.ஜி.சாவடி பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனா். விசாரணையில் அவா்கள், போத்தனூா் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கேரளத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரியவந்தது. இவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT