கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலை.உதவிப் பேராசிரியருக்கு காப்புரிமை

24th May 2023 04:57 AM

ADVERTISEMENT

கோவை பாரதியாா் பல்கலைக்கழக ஜவுளி, ஆடை வடிவமைப்புத் துறை உதவிப் பேராசிரியா் கே.அமுதாவுக்கு, வேளாண் கழிவுகளில் இருந்து பெறப்படும் சாயங்களைப் பயன்படுத்தி ஜவுளிக்கு சாயமிடுவதற்கான காப்புரிமை கிடைத்துள்ளது.

செயற்கை சாயங்களினால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படும் நிலையில், இயற்கை சாயங்களைப் பயன்படுத்தி சாயமேற்றுவது தொடா்பான ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் மஞ்சளின் இலைகளில் இருந்து இயற்கை சாயத்தை பிரித்தெடுக்கும் முறையை உதவிப் பேராசிரியா் கே.அமுதா கண்டறிந்தாா்.

இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அவருக்கு காப்புரிமை கிடைத்திருப்பதாக பல்கலைக்கழக அறிவுசாா் சொத்துரிமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT