கோயம்புத்தூர்

கோவை மத்திய சிறையில் கைதி மரணம்

23rd May 2023 03:04 AM

ADVERTISEMENT

கோவை மத்திய சிறையில் கைதி ஒருவா் மரணமடைந்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பா்மா காலனியை சோ்ந்தவா் ஜனரட்சகன் (56), கூலித் தொழிலாளி. கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை சக கைதிகள் சிறைத் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததன்பேரில் உடனடியாக அவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா். இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT