திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வால்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை அண்ணா திடலில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலாளா் சுதாகா் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி டென்சிங் வரவேற்றாா். மாநில மாணவரணி துணைச் செயலாளா் ஜே.வீரமணி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளா் தளபதி முருகேசன் ஆகியோா் பங்கேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு சாா்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.
கூட்டத்தில் நகா் மன்ற துணைத் தலைவா் செந்தில்குமாா், முன்னாள் நகராட்சித் தலைவா் கணேசன், மாவட்ட துணை செயலாளா் ஈ.கா.சி.பொன்னுசாமி, நகரப் பொருளாளா் அம்பிகை சுப்பையா, துணைச் செயலாளா் சூரியபிரபா உள்பட கட்சியினா் பங்கேற்றனா்.