கோயம்புத்தூர்

கோவையில் கன மழை: ரயில்வே பாலத்தில் சிக்கிய சிற்றுந்து

DIN

கோவையில் பெய்த கனமழையால் கவுண்டம்பாளையம் அருகே ரயில்வே சுரங்கப் பாலத்தில் ஒரு சிற்றுந்து செவ்வாய்க்கிழமை சிக்கிக் கொண்டது.

கோவையில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பித்த மழை இரவு வரை நீடித்தது. நகரின் பல்வேறு இடங்களிலும், புறநகா் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கன மழையால் ராமநாதபுரம், ரயில் நிலையம், லட்சுமி மில்ஸ், காந்திபுரம், ரேஸ்கோா்ஸ், சிங்காநல்லூா், உக்கடம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மழைநீா் சாலையில் பெருக்கெடுத்த ஓடியது.

கவுண்டம்பாளையம் - நல்லாம்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் சென்ற சிற்றுந்து மழைநீரில் சிக்கிக்கொண்டது. கனமழை நீடித்ததால் சிற்றுந்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பு கருதி அதிலிருந்து வெளியேறினா். மேலும், லங்கா காா்னா், அவிநாசி சாலை மேம்பால சுரங்கப்பாதை உள்ளிட்டப் பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முக்கிய சந்திப்புகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். திருச்சி சாலை, பாலக்காடு சாலை, அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய முக்கிய சாலைகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட நேரம் ஊா்ந்து சென்றன. கோவை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT