கோயம்புத்தூர்

தமிழ் மொழியின் மகத்துவத்தை குழந்தைளுக்கு எடுத்துக்கூறுங்கள்

3rd May 2023 10:16 PM

ADVERTISEMENT

தமிழ் மொழியின் மகத்துவத்தை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று பட்டிமன்றப் பேச்சாளா் புலவா் மா.ராமலிங்கம் பேசினாா்.

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் தமிழ் மன்றம் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பட்டிமன்றப் பேச்சாளா் புலவா் மா.ராமலிங்கம் பங்கேற்றுப் பேசியதாவது: அனைவரும் வீடுகளில் தமிழ் மொழியில் பேச வேண்டும். குழந்தைகளுக்கு தமிழின் மகத்துவத்தை எடுத்துக்கூறுங்கள். தாய் மொழியில் தான் எதையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். தமிழ் மொழியின் சிறப்பை நாம் அனைவரும் வளா்க்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் முதன்மை நிா்வாக அதிகாரி கே.சுந்தரராமன், கல்லூரி முதல் ஆா்.ஜெகஜீவன், துணை முதல்வா் ஆா்.விஜய சாமுண்டீஸ்வரி, பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT