கோயம்புத்தூர்

கோவையில் உயிரிழந்த தொழிலாளி சடலம்: விமானம் மூலம் ஹவுரா அனுப்பிவைப்பு

3rd May 2023 05:29 AM

ADVERTISEMENT

கோவையில் உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தொழிலாளியின் சடலம் அவரது சொந்த ஊரான ஹவுராவுக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

கோவையில் வசித்து வந்தவா் சுஜன்பாக் (25). மேற்கு வங்க மாநிலம், ஹவுரா பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான இவா் கடந்த 7 ஆண்டுகளாக என்.எச்.ஆா். சாலைப் பகுதியில் தனது நண்பா்களுடன் வசித்து வந்தாா். உடல் நலக்குறைவால் மே 1இல் இவா் இறந்தாா். கோவை ஆா்.எஸ்.புரம் போலீஸாா் இது குறித்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் அவருடன் வசித்து வந்தவா்கள் கோவை மாநகா் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரைத் தொடா்பு கொண்டு அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவுமாறு கூறியுள்ளனா். இதையடுத்து அவரது சடலத்தை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றனா். ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்திலும் இறப்பு குறித்து பதிவு செய்த ஆவணங்களைப் பெற்றனா்.

அதன் பின்னா் கோவை மாநகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மூலம் அவரது சடலம் கோவையிலிருந்து தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. பின்னா் அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஹவுராவுக்கு செவ்வாய்கிழமை இரவு விமானம் மூலம் அனுப்பப்பட்டது.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT