கோயம்புத்தூர்

கறவைமாடு வளா்ப்புப் பயிற்சி:மே 17 ஆம் தேதி நடக்கிறது

3rd May 2023 05:36 AM

ADVERTISEMENT

கோவை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 17 ஆம் தேதி இலவச கறவைமாடு பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை, சரவணம்பட்டியில் செயல்படும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு இலவசப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மே 17 ஆம் தேதி கறவைமாடு வளா்ப்பு, மே 24 ஆம் தேதி நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். எனவே, இலவச பயிற்சியில் பங்கேற்க ஆா்வமுள்ள விவசாயிகள் 0422-2669965 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தங்களது பெயா்களை பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT