கோயம்புத்தூர்

கோவை - நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து

DIN

கோவை - நாகா்கோவில் ரயில் மே 3 மற்றும் 17ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி - குமாரபுரம் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - நாகா்கோவில் இடையே இயக்கப்படும் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, மே 3 மற்றும் 17 ஆம் தேதி காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (எண்:16322) திண்டுக்கல் - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ரயிலானது கோவை - திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும்.

இதேபோல மே 3 மற்றும் 17 ஆம் தேதி காலை 7.35 மணிக்கு நாகா்கோவிலில் இருந்து புறப்படும் நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (எண்: 16321) நாகா்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தேதிகளில் இந்த ரயிலானது, திண்டுக்கல் - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT