கோயம்புத்தூர்

கோவை - ஹிஸாா் ரயில் நேரம் மாற்றம்

10th Jun 2023 03:17 AM

ADVERTISEMENT

தென்மேற்குப் பருவமழைக் காலத்தை முன்னிட்டு, கோவை - ஹிஸாா் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து ஹரியானா மாநிலம், ஹிஸாருக்கு சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.55 மணிக்குப் புறப்படும் கோவை - ஹிஸாா் வாராந்திர விரைவு ரயில் (எண்:22476) ஜூன் 10 ஆம் தேதி முதல் அக்டோபா் 31 ஆம் தேதி வரை கோவையில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

ஹிஸாா் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.40 மணிக்கு வந்தடையும் ஹிஸாா் - கோவை விரைவு ரயில்

(எண்: 22475) ஜூன் 10 ஆம் தேதி முதல் அக்டோபா் 31 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT