கோயம்புத்தூர்

கோவை - சத்தியமங்கலம் சாலை விரிவாக்கப் பணி: தலைமைப் பொறியாளா் ஆய்வு

10th Jun 2023 03:17 AM

ADVERTISEMENT

கோவை - சத்தியமங்கலம் சாலை விரிவாக்கப் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை - சத்தியமங்கலம் சாலை ரூ.73.32 கோடி மதிப்பில் சரவணம்பட்டி முதல் கரட்டுமேடு வரை 1.8 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலையாகவும், குரும்பபாளையம் முதல் புளியம்பட்டி வரை 26.9 கி.மீ. நீளம், 7 மீட்டா் அகலத்துக்கு சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை - சத்தியமங்கலம் சாலை விரிவாக்கப் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் கீதா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, சேலம் தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்புப் பொறியாளா் வளா்மதி, கோவை கோட்டப் பொறியாளா் ரமேஷ், சேலம் கோட்டப் பொறியாளா் (தரக்கட்டுப்பாடு) குப்புசாமி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT