கோயம்புத்தூர்

காவல் துறை அதிகாரிகளுக்கு கையடக்க கணினி

10th Jun 2023 11:07 PM

ADVERTISEMENT

 

கோவை மாநகரில் உள்ள காவல் துறை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கு ‘டேப்லெட்’ எனப்படும் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காவல் துறை டிஜிட்டல் மயமாக்கப்படுவதின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் களப் பணியாற்றக் கூடிய காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களின் பயன்பாட்டுக்கென இணைய வசதிகளுடன் கூடிய டேப்லெட் எனப்படும் கையடக்க கணினிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகரில் உள்ள 14 காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் உள்ள காவல் ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஆகியோருடன் புலனாய்வுப் பிரிவில் உள்ள காவல் ஆய்வாளா்கள் என மொத்தம் 42 பேருக்கு கையடக்க கணினிகளை மாநகரக் காவல் ஆணையா் வெ.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வழங்கினாா்.

ADVERTISEMENT

கையடக்க கணினிகளில் காவலா் செயலி, முக அடையாளங்கள் மூலம் சந்தேக மற்றும் தேடப்படும் நபா்களை அடையாளம் காணக் கூடிய வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் காவல் நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் ரோந்து விவரம், காவல் நிலையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட, நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT