கோயம்புத்தூர்

பருத்தி வாங்கி ரூ.9.95 லட்சம் மோசடி: மில் உரிமையாளா் மீது வழக்கு

10th Jun 2023 03:14 AM

ADVERTISEMENT

பருத்தி வாங்கி ரூ.9.95 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக மில் உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை சீராபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பூங்கோதை, பருத்தி வியாபாரி. இவரிடம் பீளமேடு தண்ணீா் பந்தல் பகுதியைச் சோ்ந்த பருத்தி மில் உரிமையாளா் காமாட்சி தேவி (58). ரூ. 9 லட்சத்து 95 ஆயிரத்து 739-க்கு அண்மையில் பருத்தி வாங்கி உள்ளாா். இந்த தொகையை ஒரு வாரத்துக்குள் திருப்பி தருவதாகக் கூறியுள்ளாா். ஆனால், கூறியபடி பணத்தை தரவில்லையாம்.

பீளமேடு காவல் நிலையத்தில் பூங்கோதை புகாா் அளித்ததைத் தொடா்ந்து, மில் உரிமையாளா் காமாட்சி தேவி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT