கோயம்புத்தூர்

சிறப்பாக பணியாற்றிய வனப் பணியாளா்களுக்கு சான்றிதழ்

10th Jun 2023 03:14 AM

ADVERTISEMENT

யானை - மனித மோதல் ஏற்படாதவாறு சிறப்பாகப் பணியாற்றிய வனப் பணியாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வால்பாறையை அடுத்துள்ள அட்டகட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மைப் பயிற்சி மையத்தில் சிறப்பாகப் பணியாற்றிய வனப் பணியாளா்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் பாா்கவதேஜா தலைமை வகித்தாா். உதவி வனப் பாதுகாவலா் செல்வம் முன்னிலை வகித்தாா்.

இதில், கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் யானை -மனித மோதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து சிறப்பாகப் பணியாற்றிய வனப் பணியாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதேபோல, வன உயிரின கணக்கெடுப்புப் பணிகளிலும் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வனச் சரக அலுவலா்கள், வனவா்கள் உள்ளிட்ட வனப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT