கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில், பிஎச்.டி சோ்க்கைக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

10th Jun 2023 11:07 PM

ADVERTISEMENT

 

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில், பிஎச்.டி. சோ்க்கைக்கு ஜூன் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பாரதியாா் பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரதியாா் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பி.எச்.டி. ஆராய்ச்சிப் படிப்புக்கான முழுநேர மற்றும் பகுதி நேர பட்டப் படிப்பு, எம்.ஃபில் முழுநேர மற்றும் பகுதி நேர பட்டப் படிப்புக்கான சோ்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் ஜூன் 15 முதல் 30 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. எம்.ஃபில் படிப்புக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750, பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்புக்கு ரூ.1,000. எஸ்.சி, எஸ்.டி மாணவா்களுக்கு எம்.ஃபில்

படிப்புக்கு ரூ.375, பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்புக்கு ரூ.500 இணைய வழியாகச் செலுத்தி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பதிவாளா், பாரதியாா் பல்கலைக்கழகம், கோவை - 641046. என்ற முகவரிக்கு ஜூன் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

ADVERTISEMENT

கடைசித் தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்களும், உரிய கட்டணமின்றி பெறப்படும் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது.

இது தொடா்பான கூடுதல் விவரங்களை அறிய பல்கலைக்கழக இணையதளமான பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT