கோயம்புத்தூர்

விவசாயிகள் மீதான காவல் துறையினரின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல்

10th Jun 2023 03:15 AM

ADVERTISEMENT

‘கள்’ இறக்கும் விவசாயிகள் மீதான காவல் துறையினரின் நடவடிக்கையை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அனைத்திந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளா் சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஜி.சுப்பிரமணி, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: அனைத்திந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் ‘கள்’ மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்பதற்காகவும், ‘கள்’ இறக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையிலும் திருப்பூா் மற்றும் கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள் அவரவா் தோட்டங்களில் ‘கள்’ இறக்கி வருகின்றனா். விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்துக்காகத்தான் இதை செய்து வருகின்றனா்.

ஆனால், கள்ளச்சாராயத்தால் பலா் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, காவல் துறையினா் விவசாயிகளின் தோட்டங்களுக்குச் சென்று அவா்களை கைது செய்து விடுவதாகக்கூறி வருவதால் விவசாயிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் அச்சத்தில் உள்ளனா்.

எனவே, ‘கள்’ இறக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாயிகளை கைது செய்யும் நடவடிக்கையை காவல் துறையினா் கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT