கோயம்புத்தூர்

சிறுமிக்கு திருமணம்: 4 போ் கைது

10th Jun 2023 11:06 PM

ADVERTISEMENT

 

சிறுமிக்கு திருமணம் செய்துவைத்ததாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கோவை பீளமேடு வி.கே.சாலை பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (25). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதான சிறுமிக்கும் கடந்த 8 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

தகவல் அறிந்த மாவட்ட சமூக நல அலுவலா் திலகவதி விசாரணை மேற்கொண்டதில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திலகவதி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சதீஷ்குமாா், அவரது தந்தை குருநாதன் ஆகியோருடன் சிறுமியின் பெற்றோரையும் கைது செய்தாா். மேலும், இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT